
டென்மார்க் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்திற்கு சிறப்புத் தூதரை நியமித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, திங்களன்று அமெரிக்கத் தூதரை வரவழைப்பதாக டென்மார்க் கூறியது. டென்மார்க் வெளியுறவு மந்திரி Lars Løkke Rasmussen இந்த நடவடிக்கையால் தான் “ஆழ்ந்த கோபம்” அடைவதாகவும், டென்மார்க்கின் இறையாண்மைக்கு மதிப்பளிக்குமாறு வாஷிங்டனை எச்சரித்ததாகவும் கூறினார்.